பக்கம்:கோயில் மணி.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பழைய குருடி

35

முப்பது ரூபாய் போதாது என்றான். தீவனத்தின் விலையும் ஏறிவிட்டது.

அந்தச் சமயம் பார்த்து என் மனைவி தன் யோசனையை வற்புறுத்தினாள். எனக்கும் அது சரியென்றே தோன்றியது.

மறுநாள் பால்காரரைக் கூப்பிட்டேன்; “நீர் அன்றைக்குச் சொன்னீரே. அந்தப்படி செய்யலாம் என்று தினைக்கிறேன்” என்றேன்.

“என்ன சொன்னேன்?” என்று ஒன்றும் தெரியாதவரைப் போல நடித்தார்.

“மாட்டை வாங்கித் தந்தால் நீரே வைத்துக் காப்பாற்றுவதாகச் சொன்னீரே!”

“அதுவா? ஒரு பேச்சுக்குச் சொன்னேன்: இப்போது அதைப்பற்றி என்ன?”

“எங்கள் பசுமாட்டை உம்மிடமே விட்டு விடுகிறேன். நீரே அதைப் பாதுகாத்து வைத்துக் கொள்ளும்” என்றேன்.

“இந்தக் கிழட்டு மாட்டையா?”

“என்ன அப்படிச் சொல்கிறீர்? ”

“அப்போதே உங்களிடம் சொல்ல எண்ணினேன். நமக்கு எதற்கு இந்த வம்பு என்று இருந்து விட்டேன். மாடு சுழி சுத்தம் இல்லை. வயசான மாடு” என்றார்.

“சரி, இதை நீர் வைத்துக் கொண்டு பால் கறந்து கொடுப்பீரா, இல்லையா?”

“மாட்டுக்கு ஆகிற செலவையெல்லாம் நீங்கள் தந்துவிடுகிறீர்களா?”

“செலவா! மாடு உம்மிடமே இருக்கட்டும். வீட்டுக்குப் பால் கறந்து கொடும். ஏதோ ஒரு மதிப்புப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/41&oldid=1382803" இலிருந்து மீள்விக்கப்பட்டது