பக்கம்:கோயில் மணி.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

கோயில் மணி

போட்டுப் பால் விலையைக் கணக்குப் பண்ணிக் கொள்ளலாம்.”

“இந்தத் தொந்தரவெல்லாம் எனக்கு வேண்டாம். இது இனி மேல் அடிமாட்டுக்குத்தான் சரி. நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்” என்று பிகு செய்தார்.

“சரி, வேறு யாரையாவது கேட்கிறேன்.”

“தாராளமாகக் கேட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் படுகிற தொல்லையைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. ஒன்று வேண்டுமானால் செய்கிறேன்” என்று என்மேல் இரக்கப்படுபவர் போலப் பேசினார்.

“என்ன அது?”

“மாட்டை எனக்கே விலைக்கு விற்றுவிடுங்கள். ஒரு விலை பேசிக் கொடுத்து விடுங்கள். நான் என்னால் இயன்றவரையில் அதை உருப்படியாக்கப் பார்க்கிறேன். மாதம் மாதம் பால்பணத்தில் பத்து ரூபாய் கழித்துக் கொள்ளுங்கள். ”

“சரி, என்ன விலை: நான் நானூறு ரூபாய்க்கு வாங்கினேன்.”

“நீங்கள் தெரியாமல் வாங்கினால் அதற்கு நான் பிணையா? இப்போது நூறு ரூபாய் பெறாது. உங்களுக்காக நூற்றைம்பது ரூபாய் தருகிறேன்.”

“அடபடுபாவி!” என்று மனத்துக்குள் வைதேன். வெளிப்படையாகச் சொல்ல முடியுமா? “சரி, நாளைக்குச் சொல்கிறேன்” என்று அவரை அனுப்பி விட்டேன்.

அன்று மனைவியும் நானும் யோசித்தோம்.

“அந்த நண்பரிடம் போய்க் கேட்கட்டுமா?” என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/42&oldid=1382805" இலிருந்து மீள்விக்கப்பட்டது