பக்கம்:கோயில் மணி.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

போடாத செருப்பு

51

உணர்க்கிறேன். அவர் கொண்டிருந்த அன்பையும், அந்தப் பெண் பிள்ளையால் தமக்கு ஏதோ சிறு லாபம் கிடைத்தது என்றதனால் மேற்கொண்ட நன்றியுணர்வையும் தெய்வப் பண்புகளாகவே எண்ணி எண்ணி உருகுகிறேன். அதற்கு அடையாளம் இது.”

பட்டுத் துணியில் பொதிந்திருந்த அந்தச் செருப்பு இன்னும் யார் காலிலும் அணியாத புதிய செருப்பாக, முத்தானந்தருடைய பெரு மதிப்புக்குரிய பொருளாக, விளங்கியது. அவர் சொன்ன கதையைக் கேட்டு எனக்கும் கண்ணீர் துளித்தது.

அவர் அந்தச் செருப்பை மறுபடியும் பட்டுத் துணியில் வைத்துக் கட்டத் தொடங்கினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/57&oldid=1382862" இலிருந்து மீள்விக்கப்பட்டது