பக்கம்:கோயில் மணி.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மங்க்-கீ !

53

பிறந்திருக்கிறது” என்பான். எதற்கும் கோணலான பேச்சு.

அவன் தன் முறையில் எதற்கும் பேர் வைப்பதில் புலி. அவனுக்குக் கல்யாணம் ஆயிற்று. வெடவெடவென்று ஒல்லியாய் ஆழகாய் மின்னல் கொடிபோல லலிதா மனைவியாக வந்தாள். அவளை இந்தக் கோமாளி எப்படி அழைக்கிறான் தெரியுமோ? ‘ச்சிவிங்கீ’! என்று முதல் எழுத்தை அழுத்தந் திருத்தமாக உச்சரித்து அழைப்பான். அவள் ஒட்டைச்சிவிங்கி மாதிரி உயரமாக இருக்கிறாளாம்!

அவனுடைய கிண்டலும் கோமாளித்தனமும் அவளுக்குப் பிடிக்கிறதே இல்லை. “எதற்கெடுத்தாலும் இந்தக் கோமாளித்தனந்தானா?” என்று கேட்பாள்,

“வாழ்க்கையில் எப்போதும் சிரிப்பும் கொம்மாளமுமாகத்தான் இருக்க வேண்டும்” என்பான்.

யாராவது நண்பர், “உங்கள் சித்திரத்தோடு கேலியையும் கிண்டலையும் வைத்துக் கொள்ளுங்கள் எதற்காக வாழ்க்கையிலும் இந்தக் கிண்டல்?” என்றால், “கேலிச் சித்திரம் கலையானால் என் வாழ்க்கையையும் கலையாகவே ஆக்கி வாழ ஆசைப்படுகிறேன்” என்பான்.

“நல்ல கலை ஐயா. இது! கேலியும் கிண்டலுமா?”

“பின்னே அழுகையும் ஒப்பாரியுமாக இருக்க வேண்டும் என்கிறீர்களா?”

அவன் ஒரு சிறிய வீடு கட்டிக்கொண்டான். அதற்கு ஒரு விலாசம் வேண்டாமா? ‘பராய்’ முத்திரையோடு ஒரு பெயரைச் சூட்டினான். “மண் கல் மாளிகை” என்ற பெயர் தாங்கியது அந்த வீடு.

“இதென்ன ஐயா பெயர்? மண்ணைக் கொண்டா கட்டினீர்?”-ஒருவர் கேட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/59&oldid=1382873" இலிருந்து மீள்விக்கப்பட்டது