பக்கம்:கோயில் மணி.pdf/60

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

கோயில் மணி

“மண் அல்ல; மண் கல்; அதாவது மண்ணால் உண்டான செங்கல்லால் கட்டின வீடு இது. நான் என்ன கடவுளா, கருங்கல்லால் வீடு கட்டிக்கொள்ள?” என்று விளக்கம் கூறனான்.

இதிலே ஒரு வேடிக்கை திகழ்ந்தது. தன் வீட்டுப் பெயரை ஆங்கிலத்தில் கடிதத் தாளில் அச்சிட்டிருந்தான். அதை யாரோ வெளியூர்க்காரர் படித்துப் பார்த்திருக்கிறார். மண்கால் மாளிகை, மாண் கல் மளிகை, மங்கால் மாளிகை என்றெல்லாம் தட்டுத் தடுமாறிக் கடைசியில் மங்கல் மாளிகை என்று தீர்மானம் செய்து கொண்டார். ஒரு கடிதத்தில் தெளிவாகத் தமிழில் மங்கல மாளிகை என்றே விலாசமிட்டுக் கடிதம் எழுதினார். மண்கல் மாளிகை மங்கல மாளிகை ஆனது சுப்பராயனுக்கே வியப்பாக இருந்தது. தன்னுடைய நாமகரணக் கலையின் பெருமையை உணராத அந்த அன்பரை எண்ணி இரங்கினான். கடிதத் தாளை அடுத்த தடவையிலிருந்து தமிழிலே அச்சடித்து வைத்துக் கொண்டான்.

சுப்பராயன் தன் வீட்டில் பேசும் பேச்சே அலாதி. எல்லாம் குழூஉக்குறி. சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, “சமுத்திரம்” என்பான்; எதற்கோ உப்பு வேண்டும் என்று அர்த்தம்! “சீப்பைக் கொண்டா, சீப்பைக் கொண்டா” என்பான். சாப்பிடும்போது எதற்குச் சீப்பு என்று நாம் யோசிப்போம். உணவில் ஏதோ ரோமம் இருக்கும்; அதைக் குறிப்பிக்கும் பரிபாஷை அது!

வனுக்குப் பெண் குழந்தை பிறந்தது. அவன் மாமனார் சுந்தரி என்று பெயர் வைத்தார். அந்தப் பெயருக்கு ஏற்ற குழந்தை. அதனிடம் அவனும் அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/60&oldid=1382878" இலிருந்து மீள்விக்கப்பட்டது