பக்கம்:கோயில் மணி.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

கோயில் மணி

“என்ன அப்பா, நான் சொல்வதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல்...” என்று அந்தச் சிறு கொடி முணுமுணுத்தது.

“என்ன அம்மா சொல்கிறாய்?” என்று அவளை இழுத்து மடிமேல் வைத்துக் கொண்டார்.

“இன்றைக்குக் காலையில் வந்த ரிக்‌ஷாக்காரச் சின்னப்பன் வேப்பமரத்தில் ஒரு கொத்தை மளுக்கென்று ஒடித்துக்கொண்டு போனான், அப்பா.”

“என்ன?”

“பல் குச்சிக்காக ஒடித்திருப்பான் என்று, வேலைக்காரி வேலம்மாள் சொல்கிறாள்.”

முத்துசாமிக்குக் கோபம் வந்நது. மங்கைப் பருவம் அடைந்த வேப்பமரத்தைப் பற்றியும் கவலைப்பட இடம் இருக்கிறதே!

“அந்தப் பயல் வரட்டும், சொல்கிறேன்” என்று உறுமினார்; “நான் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்து வரும் இந்த மரத்தைத் தொட அவனுக்கு எப்படித் தைரியம் வந்தது? நாளைக்கு வரட்டும். கையை ஒடித்து விட்டு மறு காரியம் பார்க்கிறேன்.”

அப்பாவின் கோபத்தைக் கிளறிவிட்டு அந்தக் குழந்தை மெல்ல நழுவிவிட்டது. முத்துசாமி யோசனையில் ஆழ்ந்தார். ரிக்‌ஷாக்காரச் சின்னப்பன் அவர் அகக் கண்ணில் வந்து நின்றான். அவன் கையில் ஒரு கோடரி இருக்கிறது. வேப்பமரத்தின் கிளையை வெட்டுகிறான். அதிலிருந்து இரத்தம் வருகிறது. “அட பாவி!” என்று அவர் கத்துகிறார், எல்லாம் பகற்கனவு. ஆனாலும் அவர் பல்லைக் கடித்துக் கொண்டார்.

மறுநாள் காலையில் அவர் தம் அறையில் உட்கார்ந்திருந்தார். கையும் களவுமாகத் திருட்டைக் கண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/66&oldid=1383918" இலிருந்து மீள்விக்கப்பட்டது