பக்கம்:கோயில் மணி.pdf/78

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புண்ணியம் ஓரிடம்

ழை என்றால் பேய் மழை. எப்போதோ இருபது ஆண்டுகளுக்கு முன் இப்படிப் பெய்ததாகச் சொல்கிறார்கள். அப்போது சென்னையில் இந்த மாதிரி மக்கள் நெருக்கம் இருக்கவில்லை. இப்போதோ எங்கே பார்த்தாலும் வீடுகள் முளைக்கின்றன. இந்த மாதம் ஓரிடம் தென்ன மரத்தோப்பாக இருக்கும்; அடுத்த மாதம் அங்கே போய்ப் பார்த்தால் அடையாளமே தெரியாது; ஒரு தெருவே மந்திரத்தாலே வந்து உட்கார்ந்து கொண்டது போல இருக்கும்.

மழை இல்லாதபோது எல்லாம் பார்க்க அழகாக இருக்கும். மழை பெய்து விட்டால் இந்தப் புதிய இடங்களுக்குப் போய் விட்டுப் போன உடையோடு திரும்பி வர முடியாது. ஒரு பக்கம் பள்ளம்; ஒரு பக்கம் மேடு. ஒரு பக்கம் சேறு; ஒரு பக்கம் ஆறு.

புதிய கட்டிடங்கள் இருக்கும் இடந்தான் இப்படி என்றால், வேறு ஒரு பகுதி இருக்கிறது. அங்கே போய்ப் பார்த்தால் ஒரே கண்ணராவியாக இருக்கும். நகர நாகரிகத்தின் நிழலாக, பேரூரின் சாக்கடையாக, ஆடம்பர வாழ்வின் குப்பைத் தொட்டியாக இருந்து நகரங்களில் இங்கும் அங்கும் காட்சி அளிக்கும் சேரிகளைத்தான் சொல்கிறேன். அங்கே மனிதர்கள்தாம் வாழ்கிறார்கள். மனிதன் இவ்வளவு குறைவான வசதிக்குள்ளும் ஒடுங்கிக் கொண்டு புகுந்து வாழ எப்படித்தான் கற்றுக் கொண்டிருக்கிறான் என்பதை அங்கே போய்ப்பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். சாதாரன நாட்களிலேயே அவலக் காட்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/78&oldid=1383946" இலிருந்து மீள்விக்கப்பட்டது