பக்கம்:கோயில் மணி.pdf/92

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

கோயில் மணி

சொன்னேன். நன்றாகப் போட்டிருக்கிறார் அல்லவா?” என்று பத்திரிகையைக் காட்டினவர் கேட்டார்.

“இதோ நீ இருக்கிறாயே! இதோ சாம்பு இருக்கிறார். இது, யார்? ஓகோ, நம் ராமனா அதென்ன வாயை அப்படித் திறந்து கொண்டிருக்கிறான்?”

எல்லாரும் ஆவலுடன் பத்திரிகைப் பிரதிகளைப் பார்த்தார்கள். அவர்களுள் ஒருவர் மாத்திரம் உற்சாகத்தோடு இல்லை.

“என்ன முத்து, படம் எப்படி?” என்று ஒருவர் கேட்டார். .

“என்னவோ போட்டிருக்கிறார்கள். என்னை மாத்திரம் வேண்டுமென்று விட்டிருக்கிறார்கள். இப்படி என்னை அவமானப்படுத்த வேண்டாம். இந்தப் படத்தில் என்னை விட்டதற்கு யார் பொறுப்பு என்பதை விசாரிக்க வேண்டும்” என்றார் அவர்.

பத்திரிகையைக் காட்டினவர், “யாரும் பொறுப் பில்லை. நீங்கள் ஒரமாக உட்கார்ந்திருப்பீர்கள். பத்திரிகைக்கு இசைவாகப் படத்தைப் போடும்போது அந்தப் பகுதியைக் கத்தரிக்க வேண்டியிருந்திருக்கும். இது ஒரு பெரிய தவறா?” என்றார்.

முத்துவுக்குக் கோபம் ஏறிவிட்டது; “நீர் சொல்வீர் ஐயா! உம் வீட்டுக்குக் காசு பணம் வாங்கிக்கொண்டா தாங்கள் பாட வருகிறோம்? அவமானம் செய்வதும் செய்துவிட்டுச் சமாதானம் வேறு கூற வருகிறீரே! இதில் உமக்குப் பொறுப்பு இல்லையா?”

அந்த மனிதர் நயமாக, “நான் படத்தை அப்படியே கொடுத்தேன். அவர்கள் வெட்டிவிட்டதற்கு நான் எப்படிப் பொறுப்பாளி. இவருடைய படத்தைப் போட வேண்டாம் என்று நான் சொல்லுவேனா? பத்திரிகைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/92&oldid=1383980" இலிருந்து மீள்விக்கப்பட்டது