பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் சீர்திருத்தச் செம்மல்களுஞ் சிந்தனகொள் சிற்பிகளும் உறங்கு கையில் "ஊர்திருத்த விழிப்பீ'ரென் றெழுப்புகின்ற காலப்போ துயர்வென் ருலும், பேர்கிறுத்தும் வஞ்சகத்தைப் பொதியவைத்துப் படுத்திருப்போர் சுரண்ட லுக்கு வேர்நிறுத்த வருங்காலை விழாவெனினும் வேம்புதருங் கசப்பே யன்ருே ? இரவுக்கு வாழ்த்தெடுத்து, நிலவுதனக் கழைப்பனுப்பி உயிரன் ஞளின் வரவுக்குப் பரிசளித்தே இன்பமதை வளர்க்குங்கால் அதைக சுக்கப் பரவுகின்ற கதிர்கண்டு பரபரப்பாய், "போறே னென் றவள் டக்க, அரவெனவே வருங்காலே அழகெனினும் வாந்திதருங் கசப்பே யன்ருே ? (அறுசீர் ஆசிரிய விருத்தங்கள்.