பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். பேராசிரியர் க. கோவிந்தராசனர் M. A.I.T. (முதல்வர், ஆசிரியர் கல்லூரி, குமாரபாளையம்.) வழங்கிய மதிப்புக் கருத்துரை : உணவிற்கு உப்பே; இலக்கியத்திற்கு நகைச் சுவையே. இச்சுவையினைக் கோவை. இளஞ் சேரன் அவர்கள் தன்மையொடு, அளவறிந்து, அழகாகத் தம் 'புளித்த காதல்’ கவிதையில் பயன்படுத்தியுள்ளார்கள். காதல் புளித்தாலும் கவிதை இனிக்கின்றது. ஒரு எடுத்துக்காட்டு: 'பால்வழியும் என்வதனம்........... 55 போல்பண்ணை வைக்கச்சொல்...”* (ஒ-ம்.) க. கோவிந்தராசன். புளித்த காதல். அவன் : சால்புடைய என்காதற் பெருமை யெல்லாம் சாற்றினையோ தலைவியிடம், அருமைப் பாங்கி ! பாங்கி : வேல்விழியாள் கேட்டணளே; கேட்ட பின்னர் வேலிருக்கத் தான்கண்டேன்; விழியைக் காணேன். அவன் : - - 'பால்வழியும் என்வதனம்' என்றே யுேம் பாவைக்குச் சொன்னயோ ? 23