பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

23. பண்பு-அடையாளச் சின்னம்

பழந்தமிழர் பண்பாடு பழகுந் தோறும்

பசுந்தென்றல் பட்டலரும் மலராய்த் தோன்றும்; பழந்தமிழில் இனிமையொடு பரிவுந் தோன்றும்;

பசுமைதவழ் எண்ணங்கள் பளிச்சிட் டேறும்; பழந்தமிழ்நா டியற்கையெனும் பதிவில் ஊன்றிப் -

பழுதில்லா வளஞ்சுரந்து பழுனிக் காட்டும்; பழந்தமிழ்நூல் படிப்பதற்குப் பரிவு கூட்டும்;

பயனெல்லாம் பசுமலையாய் நிலைத்து நிற்கும்.

நிகழ்தமிழர் பண்பாட்டை நிலை நி றுத்த

நினைவெல்லாம் தமிழ்மரபில் நிறுத்த வேண்டும்; திகழ்தமிழில் கலைச்சொற்கள் திருத்தி வைத்துத்

தீய்க்கின்ற கலப்படத்தைத் தீர்க்க வேண்டும்; புகழ் தமிழ்நா டெனச்சொல்லப் புகட்டும் கல்விப்

பயிற்றுமொழி தமிழாகப் பதித்தல் வேண்டும்; முகிழ்தமிழ்நூல் பகுத்தறிவின் முழுவோட் டத்தில்

முனைப்போடு மிகப்பலவாய் முடுக்க வேண்டும்.

|20

  • பழுனி - முதிர்ந்து

75