பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

தலைவன்:

தடையென்ன இனிக்கண்ணே? தளர்ச்சி யென்னே? தலைவி: -

தமிழ்த்தாயின் முகங்கண்டேன்; தளர்ந்து போனேன். படைபடையாய் வடபுலத்தார் பலமு னையில் பயிரழிக்கும் விட்டிலெனும் பழுதார் இந்தி நடைமுறையில் திணிக்கின்றார், நலிவே செய்வார். நந்தமிழ்த்தாய் தாழ்ச்சியொடு நறுந்த மிழ்நர் அடைந்துள்ள பெருந்தாழ்வை அகற்று முன்னர் அத்தானே, நமக்குமொரு திருவாழ் வுண்டோ?

| 38 தலைவன்:

அப்படியா! அதுசரியே; அறிவு கெட்டேன்; ஆரணங்கே! தமிழ்க்குலத்துக் காவற் பெண்டே! இப்படியோ சூடுதந்தாய்; இனித்தாழ்க் கேன்யான் இன்றமிழ்க்கே இந்திதன்னால் இடுக்கண் சூழும் செப்பிடுவித் தைக்காரர் செயல்து ளாக்கிச் செந்தமிழ்நாட் டினில்நுழைந்த இந்தி தன்னைக் கைப்பிடியாய்ப் பிடித்துடனே அனுப்பி விட்டுக் கையிலொரு தாலியுடன் வருவேன் கண்ணே | 3

(எண்சீர் . ஆசிரிய விருத்தங்கள்)

85