பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

28. "நல்ல குத்தகை.

மன்னவர் குடிதனில் சின்னையர் பண்ணையார் பன்னிரு வேலிநிலம் பட்டா உடையவர்;

தன்னலம் அவரது தனிக்குணம்; படுத்தே

தன்நில விளைச்சலைத் தான்காண விரும்பினார்.

காத்தான் என்றொரு பண்ணையாள், தன்நிலம்

காத்தான் என்பது கணக்கொடு கண்டவர்;

காத்தான் சேரிக்குக் காலையி லேபோய்க்

'காத்தா' என்றனர்; காத்தனும் வந்தனன்.

'தன்னலம் நோக்காது என்னலம் நோக்கியே,

பன்னெடு நாள்களாய்ப் பண்ணை நீ செய்கிறாய்;

அன்னதால் குத்தகைக் கென்நிலம் யாவையும்

உன்னிடம் விடுகிறேன், மாவிற்குப் பத்தாய்.

நல்லமண் ஆகையால் நன்னான்கு விளைவதும் எல்லையே என்பதும் நல்லை நீ அறிந்ததே;

செல்லும் விரைதசு செலவுகள் உன்னதே;

சில்லரைக் கடன்களும் தருகிறேன்' என்றார்.

9 |

150

I5]

|52

153