பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

"அடுப்பினிலே நெருப்பேற்ற வகை மின்றி அடிவயிற்றில் நெருப்பேற்றி அயரும் நாளில் "அடுக்காது கொடுமை'யென அலறு கின்ற அந்நாளில் மேநாளின் வாடை வீசும்!”

தமிழினத்தின் பண்டைய உயர்வு பற்றிப் பெருமை யும், இன்றைய தாழ்வு பற்றி நாணமும் கொள்ளும் கவிஞர்கோ எதிர்காலத்திற்குக் கல்வியும், அறிவியலும் இன்றியமையாதவை என்பதுணர்ந்து அக்கல்வியின் பயன் சமுதாயத்திற்குப் பரவலாகக் கிடைக்க வேண்டுமாயின் அது தாய்மொழியில்தான் இருக்க வேண்டுமென்பதை எண்ணி அறிஞர்கட்கு வேண்டுகோள் விடுக்கிறார்:

"நூல்களை இயற்றிட அறிவுளிர்

நூல்களில் புதியன இயற்றுவீர்! நூல்களாய்ச் சிறுகதை, பெருங்கதை

நூற்பதை அளவொடு நிறுத்துவீர்! நூல்களாய் அகநூ ல், அறிவுநூல்

நுண்கலை வானநூல், வாழ்வுநூல் நூல்வர லாற்றுநூல், உழவுநூல்,

நுவலுவீர், தமிழ்மொழி ஒன்றினால்!” எழுதப்படும் நூல்கள் பயனுடையதாகவும் இருக்க வேண்டும். - -

"மதர்த்துள தமிழறி புலவரீர்!

மடைதிறந் தனையதும் அறிவினைப்

புதர்க்குளே பொதிந்தந்ன் மணியெனப் புதைத்துமே வாழ்வதும் நானமே!

[| ||