பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

நகைக்கும்பல், தனித்தமிழ்வாய்,

நறுமூக்கு, நயக்குங்கண், நற்சொல் நாக்கு, முகைக்குங்கை, முந்துங்கால்,

உழைக்குமுடல் இவையென்றும் உயர்த்தல்

கண்டேம் : புகைக்கும்வாய், தம்பலப்பல்,

பொடிமூக்கு, திரைப்படக்கண், கள்சேர் நாக்கு, தகைக்குங்கை, தடுக்குங்கால்,

தடித்தவுடல் இவைநெறிகொள் தகவாய்க் காணேம்.

197

பெரும்பாடாம் நன்னோக்கம்

பிறங்கிடவே அலுப்பின்றிப் பிழைகள் இன்றி

அரும்பாடு படுவதனால்

அடுநோயும் கவலையதும் அறுதல் கண்டேம்; இரும்பாடும் காட்டாற்றின்

இடையுருண்டு மெருகேறும் கூழாங் கல்லில் வெறுப்பாசி பிடித்ததென

வேடிக்கைப் பேச்சினிலும் விளம்பக் கானேம், | 98

| 15