பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

வணிகத்தால் பொருன்நிறையும்;

வடிவழகால் கண் நிறையும்; வளஞ்சேர் ஊட்டம், அணிகளினால் உடல்நிறையும்;

அளவளாவல் இல்லத்தும், புறத்தே செய்யும் பணிகளையே திருத்தமுறப்

படைப்பதனால் மனநிறைவே பதியக் கண்டேம்; மணிமணியாம் பலநிறைவும்

மனநிறைவைப் போல் நிறைவை மலர்த்தல்

கானேம். 205

பகுத்தறிவும் நூலறிவும் -

இருதட்டாய்ப் பட்டறிவு கயிற்றுக் கோப்பாய், வகுத்தஇலக் கணங்கோலாய்,

வளைக்காத நேர்மையதே வடித்த முள்ளாய்த் தொகுத்துவைத்த நூல் ஆய்வைத்

தொடர்புள்ள வாழ்வைச்சீர் தூக்கிக் கண்டேம்; புகுத்தித்தம் கருத்தைவலி

யுறுத்துவதும் வருத்துவதும் பொருத்திக் காணேம்

- 206

! [9