பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

உடலதனில் அரிப்பெடுத்தால்

உடன் கையால் தமைச்சொறிந்தே உவப்பைக்

கொள்வார்; "படப'டென்றே மனமரித்தால்

பதறிப்போய் மற்றவரைப் பழிச்சொல் சொல்வார்; உடலரிப்போ தீர்ந்துவிடும்,

உளத்தரிப்பாம் தீராநோய்க் குழல்வார் கண்டேம்; மடல் அவிழ்கள் தேன்மதுவாம்,

மற்றொருகள் குடலறுக்காத் தேனாய்க் ಹಣ್ಣು

2

ஆள்பிடித்துக் கால்பிடித்தே

அண்டங்காக் கைபிடித்தே அடம்பி டித்து,

வால்பிடித்து வளம்பிடிக்க -

வலைபிடிப்பார் பல்லோராய் வளர்தல் கண்டேம்;

சூல்பிடிக்கப் பெண்நாயைச் -

சூழ்ந்துநின்று வால்குழைத்துச் சுற்றிச் சுற்றிச் சால்பிடிக்கும் வெறிநாய்கள்

சந்தியிலும் இழிவன்றிச் சால்பாய்க் காணேம்.

2/4

| 23