பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

இறையன்பர் என்றிடுவார்,

இறையேனும் மனத்துய்மை இலராய்ப் பல்லோர் குறையெல்லாம் தமக்கென்றே

குத்தகையாய்க் கொண்டிருப்பார் கோணல் கண்டேம்; கறையுள்ளம், புறையுள்ளம், -

கசடெல்லாம் நிறையுள்ளம், களங்க உள்ளம் இறையுள்ளம் என்றிட்டால்

'இறை என்னுஞ் சொல்லுள்ளும் எதையுங் காணேம்.

2|5

'நெற்றுக்குள் முத்தில்லை

நெருங்காநீர் எமைநெருங்கி நிற்பீர்' என்றே வெற்றுக்கண் வெடிக்கின்ற

வேடிக்கை மாந்தர்செயும் வேட்டை கண்டேம்; புற்றுக்குள் பெருமுத்தாய்ப்

பொலிகின்ற முட்டையது பொரிந்து விட்டால் உற்றுவரும் பாம்பன்றி

உறவுகொளுங் குஞ்சாக உலவல் காணேம். ό

- 2]

124.