பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

தமிழ் கற்றுத் தமிழ்மறந்து

தமக்குவருஞ் சிறுகாசைத் தகவாய் எண்ணித் தமிழ்க்குற்றம் எத்துணையோ

தவறாமல் அவைசெய்யும் தமிழர் கண்டேம் கமழ்செயலாய் இவைபேசிக்

களிக்கின்ற கயவர்தாம் பெருகி நிற்கும்

உமிழ்செயலைக் காணுங்கால்

உறைகின்ற குருதியதும் உலரக் காணேம்.

237

ஒருதமிழில் தான்புகுந்து

தெலுங்கு,மலை ஞாலம்,கன் னடாம் நான்காய்ப் பிரித்தொருமைப் பாட்டதனைப்

பிளந்திட்ட வடமொழியின் பீறல் கண்டேம்; விரிந்தஇந் திய நாட்டின்

விளங்கொருமைப் பாட்டிற்கம் மொழியே என்று பரிந்துரைக்கும் சொற்குள்ளே

படும் உண்மை தீங்கன்றிப் பயனைக் கானேம்.

238

» - * * * * * * * * * * • • • • • • • • • • • • • • • • • • • • • « یا » « سه

  • பிறல் - வெற்று ஆரவாரம்

| 3