பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/196

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கோவை. இளஞ்சேரன்

எடுத்த குரலும், மிடுக்கு நடையும்,
உடுத்த உடையில் ஒழுங்கும் - தொடுத்த
படிப்பில் உயர்வும், பழக்கிற் பணிவும்
நொடிப்பிற் செயலும் நுகர்!
296

நுகர்நேரம் பொன்போல் நுகர்ந்து, பகலோன்
நிகர்பெருமை ஆசான் நிழலாய்ப் - பகலில்
படித்தவை *கங்குலிற் பார்த்துப் படுத்து
விடியற் பொழுதில் விழி!
297

விடியற் பொழுதில் விழித்துப் பயிலின்
கடிதிற் படிந்திடுங் கல்வி; படித்தவை
ஓய்விற் படுக்கையில் ஒர்ந்துதி னைந்திடத்
தூய்தாய் அறிஒன்றும் கால்
298

காலைப் படிப்பும், கடமைத் துடிப்பொடு
மாலைக் குதிப்பும் மருவிட - வாழைக்
குருத்தின் வளர்வும், திருத்த அறிவும்,
எருத்தின் வலிவும் எழும்.

299