பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

புதுமையாய் யான் ஒன்றும் புகன்றே னில்லை; புரிந்ததற்கே கவிதைமெரு கேற்றித் தந்தேன். இது நிகழ்ந்தால் இளைஞர்நிலை உயர்ந்தி டாதோ? இனியவரே, இயற்றிடுக! மாண வர்காள்; முதுநாட்டின் விழுதுகளே! விடியற் போதில் முனைகின்ற படிப்பதுதான் வேராய்ப் பாயும்; அதுகொள்க! தாய்நாடு சிறக்க, நீவிர்

அருந்தொண்டு செயல்வேண்டும்; அறைவன் கேளீர்!

3|4

எழுத்தினிலே சிறுபிழையுந் தவிர்க்க வேண்டும்! எடுப்பான தமிழ்ச்சொல்லிற் பேசல் வேண்டும்! பழுத்தசுவைத் தமிழ்ச்சொல்லிற் பாகே உண்டு; பார்த்தெடுத்துச் சுவைத்ததனை வழங்கல் வேண்டும்! இழுத்திழுத்துப் பிறமொழியைக் கலக்கும் அந்த இழிசெயலை விடவேண்டும் உலகோர் நும்மை வழுத்துவதற் காங்கிலத்திற் புலமை கொள்க! வாழ்க்கைக்குக் குறள்கொண்டு நீடு வாழ்க!

3| 5

(எண்சீர்

ஆசிரிய விருத்தங்கள்)

| 60