பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

44. அறியாமையில் அறிவு.

கல்லாமை கேளாமை கனிவில் லாமை

கடமையதை ஆற் றாமை அழுக்கா றாமை பொல்லாமை ஈயாமை பொறுப்பில் லாமை புரியாமை தெரியாமை புகழில் லாமை நல்லாமை இன்னாமை நலமில் லாமை

நடவாமை முடியாமை நயமில் லாமை @ುಖTಣಾ எனும்ஆமை இவைகட் கெல்லாம்

ஈன்றபெருந் தாயாமை அறியா மைதான்.

3 || 6

எழுத்துபொருள் அறியாமை, உலகி யல்கொள் இயல்புநலம் அறியாமை, இலக்கி யத்தின் பழுத்தசுவை அறியாமை, பயனில் தன்மை

பழியிவைகள் அறியாமை, பிணிகள் செய்யும் அழுத்தமதை அறியாமை, அறிவி யல்கொண்

டருநில்வில் அடிவைக்கும் அருங்கா லத்தே செலுத்தஒன்றும் அறியாமை எனமா ளாமல்

செழிப்பாக அறியாமை சிறக்கக் கண்டோம்.

- - 317

16]