பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் -

நத்துகலைக் குளிக்கரைவாழ் பிச்சை யப்பா

நயமாகக் குழல்ஊத, முழுவொ லிக்க ஒத்தகலை இசையரங்கு நிகழக் கண்ட

ஒருகாட்டுப் புறத்தான்நன் குற்றுப் பார்த்துப் 'பொத்தல்பட்ட பட்டமரக் கொட்டா விக்குச்

செத்துவிட்ட மாடுகம்பால் அடிபட் டிங்கே கத்துவதை இத்துணைபேர் காண்பார்' என்றே

கத்தி நின்றான், இசைக்கலையில் அறிவில் லாமல். 320

இசைக்கலையில் அறிவில்லான் எனினும் அன்னான்

எடுத்துவிட்ட ஏளனத்தில் இழைந்து நிற்கும் நகைச்சுவையில் அவன்மூளை நடப்பைக் கண்டோம்;

நகத்தக்கார் ஆயிடினும் அவரி டத்தே முகைத்துவரும் அறிவுமுளை இருக்கு மென்றே

முனைப்பாக அதைவளர்க்க முயலல் வேண்டும்; பகைப்பில்லா வெற்றியதன் படிஒன் றாகும்;

படியேறிச் செல்வதற்குப் பயிற்சி வேண்டும்.

32!

I 63