பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

45. தமிழ் அணிகலன்

செந்தமிழ் இன்பமதே - தமிழீர், செப்பும் அளவுளதோ? அந்தமிழ் வான் அளக்க - தமிழீர்,

அளவுகோல் கண்டதுண்டோ?

கன்னல் கசப்பென்பார் - செந்தமிழ்

கண்டிட்ட நுண்சுவையோர்; மின்னல் இருட்டென்பார் . செந்தமிழ்

மேவும் ஒளியுணர்வோர்.

உள்ளம் கவிழ்ந்திருப்பின் - செந்தமிழ்

ஊக்கம் அளிப்பதுகாண்;

வெள்ளம் என அறிவைச் - செந்தமிழ்

வெற்றிக் களித்திடுங்காண்!

முன்னவர் வாழ்ந்த நிலை - செந்தமிழ்

முன்னிற்கச் செய்வதுகாண்;

பின்னவர் வாழ்வினுக்கும் - செந்தமிழ்

பெற்றி அளிப்பதுகாண்;

| 69

326

327

328

329