பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

பிற்குறிப் பொன்றைப் பின்னே வைத்து, நற்சேர்க்கை நாடும் நாடித் துடிப்பொடு நின்னுளம் தொத்தி நிலைத்த பொன்னிப் பொறையன் பொதித்தேன் வணக்கமே. - கரிதகம் (நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பார் பிற்குறிப்பு:

பொங்கலுக்கெனப் பெறவேண்டுமே

தங்கச்சீரகச் சம்பாஅரிசி

கற்கண்டொடு கமழ்வெண்ணெயும்

சொற்கண்டன சுவைஆன் பால்

ஏலமுந்திரி பசும்'.பாளிதம்

கோலமணப்பொருள் குலைக்கணிகளும்

மேலும் உள்ளன. நாலும் வாங்கிவை!

நானோ,

உணர்ச்சி வெள்ளமாய் வருவேன்

குணச்சித் திரமே குறிப்பிது கண்ணே!

(குறளடி வஞ்சி350)

AAAAAA SAAAAA SAAA LLAA A SASAAAA AAAA AAA SSHSH HSHSAAAAAA AAAA AAAAA

பாளிதம் - பச்சைக் கருப்பூரம்

179