பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

வாடிக்கை யாகவே அவர்க்குள்ளே

வாங்கல் கொடுக்கல் தீர்த்தபின்னர், வேடிக்கை யாய்ச்சில பேசிவந்தார்;

வெற்றுப் புரிசைகள் ஓய்ந்தபின்னர் ஆடிக்கை கோத்தவப் பொறையனுமே

ஆம்,எங்கே பொங்கலுக் காவனதாம் தேடிக்கை கூடின தேட்டமெல்லாம்

தேன்குடிலே! யான்காண வேண்டும்'என்றான்.

- 353 பொருத்த மாயுள பொருளெல்லாம்

பொலிவாய் வாங்கி நான் பேழையுளே திருத்தி வைத்துளேன் பாரும் என்றாள்:

திறந்து காட்டினாள் பேழையினை, உறுத்துப் பார்த்தனன் ஒன்றுமிலை;

ஒரிரு நூல்களும் மைக்கூடும் பருத்த மையூற்றுக் கோலிரண்டும்

பக்கத்தில் தாட்பொதி யுங்கண்டனன்.

354

  • தாட்பொதி - தாள்கட்டு

|8 |