பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

'தைப்பொங்கல் தமிழ்த்திருநாள்

தமிழ்த்திருநாள் என்பதற்கு மெய்ப்பங்காய்த் தமிழ்நூல்கள்

மெருகமைந்த செய்யுளிலும்

தெய்ப்பில்லா உரைதனிலும்,

தொகுத்தமைத்தும் தாம்படைத்தும் மெய்ப்பொங்கல் பொங்குதற்கே

முதற்பொங்கல் நாமிடுவோம்.

363

என்றெண்ணி இக்குறிப்பில்

எடுத்தமைத்தேன் பேழையிலே;

நன்றெண்ணி இக்குறிக்கோள்

நடைமுறையில் வருவதற்கே துன்றெண்ணம் கொளஉமை நான்

தொழுதுபணிந் தேன்'என்றாள். குன்றன்ன தோளுடையான்

குனிந்ததலை நிமிர்ந்திட்டான்:

364

(தரவு கொச்சகக் கலிப்பாக்கள்)

| 86