பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

முழுத்தும் நயமதே, ஆனால் - எழுத்திற்குச் (50)

சாரியை 'கார'மெனச் சார்ந்திருக் கும்போது காரமே இல்லையோ என்றிட்டான். - காரந்தான் ஒன்றே உளதால் அதிகாரம் (அதி காரம்) இல்லையே’ என்றாள். அதனால், அதிகாரம் - என்பதே

தொல்காப் பியமதில் தோற்றிய தில்லெனச் (55) சொல்லவுஞ் சொல்வாய்’ எனச்சொல் - மெல்லியல்

"சொல்லதி காரமும் தொல்காப் பியமதில் இல்லென் பதற்கும் இடமுண்டு - சொல்வேன்: வளவிய செந்தமிழ்ச் சொல்லில் வடசொல் நுழையும் விதிப்பில் "வடசொற் - கிளவி (60)

வடவெழுத் தொரீஇ' எனவே, வடசொல் முடம்படச் செய்த முறையால் - வடசொல் முழுவுரு வம்போய் முடங்கித் திரிந்து எழுதற் கியலா நிலையுற் - றழும்வட

சொல்அதி காரமும் தொல்காப் பியமதில் (65) இல்லென் பதற்கும் இடமுண்டு; - செல்வப் பொருளை விளக்கும் பொருளாய் எதையும்

j91.