பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

புண்ணின்றி நடுங்கவைக்கும்

பொல்லாத வாடையதைத் தண்ணென்னும் நறுந்தமிழால்

தகவாக்கி வனைந்தனைகாண்; ஒண்ணாத ஒன்றெடுத்தே

ஒள்ளியதாய் நலம்பாடி

மண்ணள்ளிப் பொன்னளிக்கும்

மதர்ப்பதனை என்னென்பேன்!

மிகத்தளர்த்தும் பிரிவென்னும்

அகப்பொருளும் வைத்துப்போர் முகத்தமைக்கும் பாசறையாம்

புறப்பொருளும் இணைத்தனைகாண்; பகைத்துப்போம் பாசறையில் --

பாண்டியன்றன் திறம்பாடி

அகத்துக்கே புறங்காட்டி

அடைந்தவெற்றி என்னென்பேன்!

- இவை மூன்றும் தாழிசைகள்

195