பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

என்றெலாம், - தனிச்சொல்

நற்பெரும் புலவ,நின் நயமார் பாடலின் சொற்பயன் சுவைத்தனன்; சொல்லிப் பரவுவன்: பருவப் பாங்கும், பாடமை மூதூர் தெருவும், அரணும், தேர்ந்தநல் லில்லும், கட்டடக் கலையும், கதவின் நிலையும், கட்டிலிற் 'கச்சுக் கட்டில்'என் றொன்றும், அன்னத் துரவியில் அணையும், அந்நாள் வண்ணத் தமிழர் வளத்தின் ஈட்டமாய் வனைந்த பாங்கை நினைந்தின் புறுவன். இவையெலாம் தொகுத்துச் சுவையெலாம் வகுத்துக் கடிதாம் பிரிவிற் கலங்குவார்க் குக்கூதிர் நெடிதாய் நீடலின் நெடு'என் சொல்லும், காதல் மறந்து கடும்பா சறையில் மோதலுக் குதவலின் நல்லெனுஞ் சொல்லும் வடக்குக் காற்றதால் 'வாடை என்றும் அடுக்கினை 'நெடுநல் வாடை' எனும்பெயர். நின்றன் புலமைக் கென்றன் தமிழ்க்குலம் என்றும் நன்றிபா ராட்டி ஒன்றி வணங்குதும் நின்று தழைக்கவே.

- சுரிதகம்

369 Iநீர்த்திரை ஒத்தாழிசைக் கலிப்பா)

198