பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

மதர்த்துள தமிழறி புலவரீர்!

மடைதிறந் தனையதும் அறிவினைப் புதர்க்குளே பொதிந்தநன் மணியெனப் புதைத்துமே வாழ்வதும் நாணமே! இதற்கிது பொருளென, அன்றென

இடைமறுப் பெழுதியே நாளெலாம் பதர்க்கென உழுவதை விட்டுநீர்

பயனுடைச் செயல்களே ஆற்றுவீர்!

374 ஒருமுறை பயின்றபின் மூலையில்

ஒதுக்குதல் நூலெனத் தகுவதோ? தருசுவை தேன்.எனச் சுனையதன்

தெளிவெனத் தென்றலின் போக்கெனப் பொருளுடை நூல்களே புதுக்குவீர்!

பொன்னெழுத் தெனுஞ்சொலை ஆக்குவீர்! மருவிய எழுத்துளிர், மனங்கொளின்

மண்ணிடைத் தமிழகந் தாழ்க்குமோ?

375 (அறுசீர்

ஆசிரிய விருத்தங்கள்)

20|