பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

நல்லொழுக்கம், நற்பண்பு,

நாகரிகம், வாழ்வகையைச் சொல்வித்த பொய்யாத

சொல்லென்னும் குறள்தனக்கே வல்விலங்காம் வடமொழியின்

வழிகொண்டே உரையெழுதிக் கொல்வித்தான் தமிழ்ப்பண்பைக்

கொடும்பரிமே லழகன் என்பான். 378

கிள்ளைமொழி ஆழ்வார்கள் கிளந்திட்ட பெருநூற்கு வெள்ளையிய்ப் பெருவிளக்கம்

வரைவதாய், வடமொழியைத் தள்ளாமல் தமிழ்தள்ளித்

தகர்த்திட்டான் தமிழ் நடையைப் பிள்ளை எனும் போர்வையிலே

பெரியவாச்சான் எனும்பெயரோன். 379

203