பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

51. முதன் மொழி

மாந்தனின் முதன்மொழி தேன்தமிழ் மொழியே; ஏந்துவம் இதற்கோர் ஏற்புடைச் சான்றே.

தொன்மை மொழியின் தோற்றுவாய் காணத் தென்றிசை உலகைத் தேர்ந்தனர் அறிஞர்.

தென்றிசை அதனிலும் தென்றமிழ் நாட்டுத் o தொன்மலை முகட்டில் தோன்றினர் மாந்தர்; அன்னவர் வளர்ந்தே அக்கால இலெமூரிய முன்னவர் ஆயினர்; முதன்மை மாந்தர்

அவரே என்றனர், அறிஞர் உறுதியாய். எனவே,

மலையில் முளைத்ததே மக்கட் பூண்டு. (10)

முளைத்த பூண்டின் முளையதோ குழந்தை. பிறந்த குழந்தை பிளந்த வாயது திறந்த ஒலியே திகழும் அகர'மாம். திறந்த இதழ்களைத் திரும்ப இணைக்கப் பிறந்த ஒலியே மகரம் ஆயிற்றே. (15)

207