பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

குமையவைக்கும் அச்சமே வெலவெலப்பு;
வெலவெலப்புண் டாக்கிவிடும் துடிதுடிப்பு:
-வெற்றிக்கோ அதுதடுப்பு.
417

விரைந்துவிரைந் தோடுவது பரபரப்பு:
வீண்செயல்கள் குறுக்கிட்டால் குலைகுலைப்பு;
வெற்றிக்கு விடைகொடுப்பு.


இரைந்திரைந்து பேசுவது வெடிவெடிப்பு;
இதுயிரைக் கலைக்கின்ற பொடிபொடிப்பு,
-இறுதியில் உயிர்துடிப்பு.
4|8

ஆய்விட்டுப் பேசாத மொணமொணப்பு,
வாழ்க்கையிலே நோய்க்குறியின் தொணதொணப்பு
-அதுதான் நலத்தடுப்பு. இபாய்விட்- பொருள்எண்ணும் நம நமப்பு,
பொல்லாங்கைச் சேர்த்துவிடும் நறநறப்பு
-அதனால் வீண்அலுப்பு.
4|9


நீட்டுகின்ற வளவளப்பு,
பெருமைதனை நழுவவிடும் வழுவழுப்பு
கேட்போர்க்கும் பெரும்.அறுப்பு:
230