பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

சீர்தென்றல் இளவேனில் செழிசெழிப்பு:

சிறுசாரல் கோடைமழைப் பொலபொலப்பு;

- இயற்கைதரும் பரிசளிப்பு

429 சாதி,தாழ்வு எண்ணும்மணச் சொரசொரப்பு;

சார்ந்திட்ட புண்ணதனில் சொதசொதப்பு;

- குமுகாயச் சீர்குலைப்பு.

காதில்விழு வதைப்பரப்பும் கிலுகிலுப்பு;

காத்துவரும் அமைதிக்கோர் இடியிடிப்பு; – ಹಗೆ೧rುಹ೮ fr36784

o அகரமுத வியில்உண்டு நொசிநொசிப்பு; 430

அதன்பொருளோ புறங்கூறும் பிசுபிசுப்பு;

- அறிந்திட்டால் பல்லிளிப்பு. பகரும் ஒரு சொல்லமைப்பு கொடுகொடுப்பு:

புரியாத பேச்சென்னும் பொசுபொசுப்பு:

- பொருள்மேல் உடல்நடுக்கு.

43 | வழக்கத்தில் அடுக்கும் இந்தச் சொல்லடுக்கு,

வக்கணையாய் உண்டதிலே பொருளடுக்கு;

- வடிக்கின்ற அடுக்கடுக்கு.

234