பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை, இளஞ்சேரன்

பழிவளர்க்கும் பொருளமைத்துப்

பக்குவமாய் நீ,என்பார்;

மொழிவளர்ப்பாய் வயிறுவளர்த்

தொழிகின்ற இவர்சில்லோர்.

- தாழிசைகள்

இவ்வணம், - தனிச்சொல்

தேராத் தமிழரின் தீராச் செயலினால் காராக் கருணைக் கிழங்கெனக் கருத்து, வெந்த சேப்பங் கிழங்கென வெளுத்து நொந்திடச் செய்து, நோவுற வைத்தனர். உன்முகம் உணக்கும் உமிழ்செயல் உணர்ந்தேன்; 'என்மகன் ஆணை’ என்றேன், கவிஞனேன்; கவிதைக் குமரியே, கண்ணே!

புவிதனில் உன் புகழ் புரிவதென் தொழிலே!

- சுரிதகம்

(நேரிசை ஒத்தாழிசைப் கலிப்பாl

238