பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேன்

ஆ. எண்ணக் குயிலே!

உண்ண்ப் பழக்கிய வாயை

உரைக்கப் பழக்கிப் பாவைப் பண்ணப் பழக்கிய தாயே!

பாலில் முப்பால் ஊட்டும் வண்ணத் தமிழே வாழ்க!

வழங்கும் மொழிப்பூங் காவின் எண்ணக் குயிலே வாழ்க!

என்னுள் ளத்தே வாழ்க’

- х x 442 இ. பாரில் உயிர்வாய்!

நாவின் அசைவிற் பிறந்து,

நாடித் துடிப்பில் நகர்ந்து, தாவில் உரையில் தவழ்ந்து,

தமிழப் பெயரில் மலர்ந்து, மேவும் உலகிற் சிறந்து,

மேன்மை மொழியாய்த் திகழ்ந்து

பாவில் அமரும் தாயே!

பாரில் உயர்வாய் நீயே!

443

(அறுசீர் ஆசிரிய விருத்தங்கள்)

240