பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

பயிலற் கெளியஇயல் பருகற் கினிய இசை

பயனுக் குரிய நடிப் பருளினள் - நலம் படியப் புறம் அகங்கொள் பொருளினன் - நிலம் வாழவேநெறி சூழவேதுயர் வீழவேவளம் ஆளவேமுறை

பகரக் குறளணிகொள் திருவினள் - சுவை பழுநப் பலபெருநூற் றிரளினள்,

பயிரிற் பசுமையெனப் பரிவுற் றெமதுகணிப்

பனுவற் பொலிவதனிற் கனிகுவள் - மொழிப் பணியில் எமக்கொருபொன் வணிகுவள் - புல வோரையாள் நறும் பாவையின்று நல் லோரைமேலுறும்

பாரையாளுகை பெருகற் குரியவெற்றி துணிகுவள் - அனை

பெருமைத் தமிழ்த்திருவை அணிகுவம்.

- 452

(இடை தனிச்சீர் வீட்டிசைக்கும் இருபதின்சீர்ச் சந்த விருத்தம்)

245