பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

"இருநோக்கு இவளுண்கண் உள்ளது' *

'அஞ்சுவ தஞ்சாமை பேதைமை" - எனும் குறட் பாக்களுக்கு இனிய முறையில் விளக்கம் தரப்பெற்

றுள்ளது.

யாப்பு வடிவங்கள்

யாப்பின் எல்லா வடிவங்களையும் கையாண்டுள் ளார். வடிவத்தை முன்னிறுத்துவது மரபுக் கவிதை' என்பதை மெய்ப்பிப்பதுபோல் இத்தொகுப்பு விளங்கு கின்றது. மாணவர் பத்து அந்தாதித் தொடையில் அமைந்துள்ளது. நெடுநல்வாடை அம்போதரங்க ஒத் தாழிசைக் கலிப்பாவில் அமைந்துள்ளது. அதையே நல்ல தமிழில் நீர்த்திரை ஒத்தாழிசை என்று குறிப் பிட்டுள்ளார். கலிப்பாக்களை இக்காலக் கவிஞர்கள் எவரும் விரும்பிப் பாடுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

'உண்பதற்குச் சோறு திண்பதற்குத் தம்பலம்’ எனும் தலைப்பில் இரண்டு புதுமைகள் உள்ளன. கவிதை உட்பட எல்லாவகையான யாப்புகளையும் கையாண்டுள் ளமை ஒன்று; மரபுக் கவிதையைச் சோறாகவும், புதுக் கவிதையைத் தம்பலமாகவும் காட்டுவது மற்றொன்று. புதுக்கவிதையை இவர் வெறுக்கவில்லை. ஆனால், புதுக் கவிதையாளர்களின் வரையிறந்த கொட்டங்களை இவர் ஏற்கவில்லை. அதனால்தான் மேற்கண்ட தலைப்பையும் தந்துள்ளார், . . . . -

புதுக்கவிதை எழுதும்போதும் மரபின் ஆட்சியே வலுவாக நிற்கிறது.

(26)