பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

59. கதை இனித்தது;

செயல் புளித்தது.

வேதமொ டுகுறள் ஓதிய வர் நல்ல

வேங்கடை யர்குறட் பாங்கினையே ஆதிமு தற்பொருள் சேதியெல் லாமறி

வாற்றலு டன்னுரை சாற்றிவந்தார்: வீதியி னர் பள்ளுச் சேரியி னர்,அயில்

கண்ணினர், காளையர் நண்ணிவந்தே காதிடுங் கூட்டத்தில் கண்ணிட்டு நின்றனன், 'கண்ணன்'எ னும்ஐயர் சின்ன'மகன். வெட்டுங் கருவிழி, கொட்டும் அழகுநல் 462

வள்ளியெ னும் பண்ணைப் பள்ளிதரும், மொட்டெனும் பார்வையைச் சட்'டெனக் கண்டனன்,

மெல்லக்கு றிகாட்டிக் கொல்லைபுக்கான்; சிட்டுப்ப றப்பெனக் குட்டிய வள்யள்ளி

சிந்தும் சிரிப்புடன் வந்துநின்றாள்; தொட்டனன் தீட்டொன்றுஞ் சுட்டதில் லை அவள்

தொத்தினள் தோளினில், முத்தமிட்டான்.

463

253