பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

சித்திரைத் திங்களில் நந்திய தாமிந்தச்

சின்ன'வி ளையாடல் வண்ணமுற்றே முத்தனை யாளிடம் வித்தும்மு ளைக்கநல்

மேனி பசந்தனள் ஆனியிலே, கொத்திய தென்னடி தொத்துநோய்' என்றப்பன் கொக்கரித் தான்.வள்ளி கக்கிவிட்டாள்; கத்தியும், கன்னியும் ஒத்தெடுத் தேகுறள்

கற்றவர் தம்மையே பற்றவந்தான். 464

தெள்ளுகு றள்ஐயர் சொல்லி நின் றர்கதை;

'தென்புலைச் சாதியாள் ஆதிஎன்பாள்

வள்ளுவ ரை உயர் பார்ப்புப் பகவற்கே

வார்த்தனர்' என்றனர்; ஆர்த்துவந்தோன்; வள்ளிஎன் றன்பறைப் புள்ளிமா னும்உயர்

வண்ணத்துக் கண்ணனுஞ் சொக்கியதால், வள்ளுவர் வயிற்றில் பள்ளிகொண் டாரிதை

வாழ்த்துவீர் மன்றுளிர் வாழ்த்தீர்' என்றான்.

. 465

254