பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

63. மறைந்தோ போவாய்?

'முழுநிலவே, விண்ணகத்துத் தங்கத் தட்டே, முதிர்காதற் குமரியவள் முகத்திற் பூக்கும் எழில்உருவே' Tಣಿ!JTಣ6Tಹ கவிஞர் பாடும் ஏற்றங்கேட் டதற்கலர்ந்த முழுநி லாவே! "எழுதரிய விண்ணகம்ஒர் எண்ணெய்ச் சட்டி, எழும்முகிலோ நுரையாகும்: அதிலே நியோ சுழிகின்ற அப்பளமாய்ச் சுழல்வாய்' என்றால்

"சுடப்பட்ட மலர்'எனவே சுருண்டோ போவாய்'

483

அன்றொருநாள் அவள் உதட்டில் முத்தம் பாய்ச்ச அணைத்தவுடன் குனிந்ததலை நிமிர்த்தத் தொட்ட மென்முகவாய் விளிம்புருவே' என்றே காதல் மேவியவர் சொற்கலர்ந்த அரைநி லாவே! 'சின்னவொரு பொடியனவன் தின்னக் கொண்ட சிதல்.எடுத்த நாரத்தஞ் சுளை நீ என்றால் கன்றிப்போய் உடல்தேயக் கருகித் தீய்ந்து

கருங்காரின் வாய்ப்பட்டுக் கவிழ்ந்தோ போவாய்?

484

272