பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

64.பாக்களில் பூக்களை வைத்தால்...!

பூக்களைப் பாடிட வேண்டும் - மனப்

பூரிப்பு எல்லையைத் தாண்டும்; பாக்களில் பூக்களை வைத்தால் என்றும்

பூக்களும் வாடாத முத்தாம்.

486 நீரிலே பூத்ததே உலகம் அது -

நீர்ப்பூவாய் என்றுமே உலவும்: பாரிது பூவுல கென்றே - நறும்

பூவால் பெயர்பெற்ற தன்றே.

487 பூவால்தான் காய்நெல்லும் விளையும் - அவை 'பூவா'வாய்ப் பசிநோயும் களையும், சாவாமல் காக்கின்ற விருந்து - பூவின்

சாற்றினால் உண்டாகும் மருந்து".

- 488 அழகிற்குப் பூவன்றோ பரிசு - பூவின்

அழகின்றேல் உலகமே தரிசு;

'உலகினில் உயர்ந்தது பூவே - என்றே

உரைப்ப தகராதி நூலே".

48%

AAAAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAA SA SA A AA AAAA AAAASAAAA

  • பூவா குழந்தை மொழியில் உணவு

274