பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

நீந்தவுத் திரியவும் நிகழ்த்தாது குஞ்சினை ஏந்தலும் இலாமல் இறக்கிடும் மீன்போல், நேர்ந்தளன் அன்னையும் நேயமாய் என்னையே

ஈந்தனள் உலகினுக் கியற்றிடப் பணியதே.

நள்ளிருட் டினிலும், நடுவெளி யினிலும் தள்ளிப் பின்னுளோர் தருக்கொடு முடுக்கவே வெள்ளித் திவலையான் வீழ்ந்துவர லானேன்,

துள்ளிக் குதித்திடுந் துணிகன் றெனவே.

கல்லினும் முள்ளினும் கடுகவே வீழ்ந்து சல்லிகள் உருட்டியுஞ் சந்தெலாம் புகுந்தும் 'ஒல்லென உருண்டமை ஒழிந்திட நிலத்தில்

மெல்லவே நடந்தேன், பள்ளங்கள் நாடியே.

சலசல ஒலியொடு சிலுசிலு' எனவே

'கலகல எனவே கவிந்துங் குவிந்தும்

பல பல நாள்களாய்ப் பகலோ டிரவும்

நிலவுல கதன்மேல் ஓடினேன், நெளிந்தே.

280

50%

5|| 0

52