பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

கெட்ட குடியேசீர் கெட்டு வருதலாய், எட்டிய இடமெலாம் எமனே சூழ்ந்திடச் சட்டியுஞ் சகதியுஞ் சார்ந்தே படிந்திடக் கட்டிளை யோர்முதற் கிழவருங் கலக்கவே.

அடியிடம் அல்லல்என் றசைந்துமேற் சேர்ந்து. கடிய தீ உதைப்பக் கலங்கி, இடையே நெடியவே ஓட்டமாய் நெஞ்சம் பதறிட, மடியவே எண்ணி மனஞ்சலித் தலைந்தனே,

துன்பக் காட்டினில் இன்ப மலர்ச்சியாய்

என்பிலா நங்கையென் ஏழ்மைக் கிரங்கி அன்பினால் அதிர்த்துடன் அலைகளை அனுப்பும்

என்பெரும் புக்கக இருப்பிடங் க்ண்டே,

ஆர்வம் பொங்கிட அசைந்தே நகர்ந்து சோர்வெலாம் விலகிடச் சேர்ந்தேன் அவ்விடம்;

சார்வதால் நன்மையே சாருமென் றெண்ணினேன்; ஊர்வலம் வந்ததில் உற்றதே பெற்றனே.

28 |

513

5|4

515

5|| 6