பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

ஞாயிற் றதனை நகைதிங் களதை

யாம் போற் றுது'மென் றொருகாப் பியத்தின் வாயிற் றிறந்த வளமார் புதுமை

அவனே யன்றி எவனே செய்தான்? -

553

பொழில்சேர் வளமார் புகார்க்காண் டமதில்

பொன்னார் உளத்தன் பொழியும் பெருமை எழில்சேர் கவிதை ஏற்றத் தனிலே

எளிமை தவழும்; இனிமை அவிழும்.

. 564

முத்துடை வளமார் மதுரைக் காண்டம்

முழுதும் இழைந்து முழங்கும் பொருளில் அத்துணைச் சுவையும் அருங்கண் ணகிதன்

ஆண்மைச் சுவையாம்; அவலக் குவையாம்.

565

வனப்பார் மலைசேர் வஞ்சிக் காண்டம்

வழங்கும் புகழ்ம்ை வகைசேர் பொருளில் சினப்போர்த் தமிழன் சிறப்பிற் புறமார்

சீற்றம் மிளிரும்; ஏற்றம் ஒளிரும்.

566

296