பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

உலகம் வியக்க ஒருபெருங் கோயில் பலகலைப் பேழையாய்ப் படைத்த கலைஞன்; கோயில் குமுகாயக் கூடம்செய் புரட்சியன்; சைவன்; வைணவ, பெளத்தப் புரவலன்; சிற்றம் பலத்துச் சிற்றுளப் பூசையர் மூடி முடக்கிய மூவர்தே வாரம் நாடிக் கொணர்ந்து பாடிய பாடலன்;

எவன் அக் கொற்றன்? எப்பெய ரத்தன்? அவன்செயற் கெல்லாம் அளிக்கும் நன்றியாய் அவனாட்சி யாண்டோர் ஆயிரம் நிறைவில் நூறா யிரத்தொரு வெண்பொற் பரிசைச் சீராய்த் தமிழ்ப்பல் கலைக்கழ கம்அவன் பெயரால் இராச ராசப் படைப்பிலக்

கியப்பரி சமைத்துப் போற்றிய தவன்றன்

இயற்பெயர் அருண் மொழித் தேவன்; அவன் புகழ்

செஞ்ஞாயிற் றொளியாய்ச் செழித்து வளர்க,

தஞ்சைப் பெண்ணே, நன்செய்க் கண்ணே!

(G 1)

(2び)

(2 5)

(3 0}

(31 J 576

(நிலைமண்டில ஆசிரியப்பா)

30|