பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

71. உணர்ச்சியின்

ஊற்றுக்கண்

நெஞ்சக் கூட்டை நெகிழ்த்து நிறைந்த செஞ்சொற் கவியின் செங்கோல் வேந்தே! பாரதி ற் சிறந்த பாரதிப் பெயரோய்! சீரதி கம்பெறும் சிறந்தஉன் எழுதுகோல் மோந்து மகிழ்ந்து முத்தமிட் டுவப்பேன். (5)

"தமிழ்மொழி, தமிழன், தமிழச்சி இவரினும் கமழ்மற் றவர்எனில் கவல்வேன், ஒப்பேன் புண்படு வேன்"எனப் புகன்றாய்; இதுபோல்

பண்டை நாள்முதல் பாய்ச்சியோர் காண்கிலேன்.

முளைகொள் உணர்வில் முகிழ்த்த இவ்வுரை (I 0 ) சுளையின் சாறு; சுடர்ப்பொன் வீறு. இதனை,

வெறுப்புணர் வதனின் வெளிப்பா டென்பார்

304