பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

74. சிலையில் ஓர் ஆண்மை மலை.

நாகையில் பிறப்பை வைத்தார்;

நா.,கையில் தமிழை வைத்தார்; ஒகையில் துறவை வைத்தார்;

ஒளியினில் இறைமை வைத்தார்; வாகையில் வாழ்வை வைத்தார்;

வகைவகை நூல்கள் வைத்தார்; ஆகையால் சிலையை வைத்தோம்; அவர்நெறி செயலில் வைப்பீர்

597 1.அறுசீர் ஆசிரிய விருத்தம்)

  • நாகப்பட்டினத்தில் நிறுவப்பட்டுள்ள நிறைதமிழ்ச் செம்மல் மறைமலையடிகளார் முழுஉருவ வெண்கலச் சிலைப் பீடத்தில் கல்வெட்டாகப் பொறிக்கப் பெற்றுள்ள பாடல்

3|8