பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

உடையவர்களது கவிதைகளில் கருத்து வளம் சிறந்து நிற்கும். கவிஞர்கோ இளஞ்சேரன் அவ்வகையில் சிறந்து நிற்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

- மாந்தனின் முதன்மொழி தேன்தமிழ் மொழியே” (382) என்கிறார். உலக மொழிகள் அனைத்தும் ஒரு மூலத்திலிருந்தே கவைத்திருக்க வேண்டும் என்று உலக மொழிநூலறிஞர் மாக்சுமுல்லர் குறிப்பிட்டார். அந்த 'மூல மொழியோடு தமிழ் நெருங்கிய தொடர்புடையது' என்று தம் ஆய்வு முடிவை வெளிப்படுத்தினார் கால்டு வெல். பாவாண்ரோ, அந்த மூல மொழியே தமிழ்தான்' என்பதைத் தம் முதல் தாய் மொழி எனும் நூலில் மெய்ப்பிக்கின்றார். கவிஞர்கள் பொதுவாக இவ்வளவு ஆழந்த கருத்துகளை யெல்லாம் தம் கவிதைகளில் கொண்டு வருவதில்லை. இவ்வகையில் கவிஞர்கோ'இளஞ் சேரன் தனித்துநிற்கிறார்.

மொழியைப் பேசியவர்-பேணியவர் மாந்தரே என்ப தன் வாயிலாக, -

"ஆதிசிவன் பெற்றுவிட்டான்-என்னை ஆரிய மைந்தன் அகத்தியன் என்றொரு வேதியன்" - -என்று பாரதி கூறிய கருத்தினை மறுத்தும் விடுகிறார். "பார்ப்பான் என்றவர்படிறெலாம் பாடினாய்"(580) -என்று நுட்பமாகத் தெரிவிக்கிாார். பாவேந்தரைப் பாடும்போது,

சாதி அரக்கி சமயக் கிறுக்கனொடு காதற் பானையில் கட்டிக் கிடந்தனள்' (633)

I33]